விரைவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு முஸ்லிம் சமூகம் முகம்கொடுக்க நேரிடும் - அத்தே ஞானசார தேரர்

.எஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள், இலங்கைக்கு ஏற்படலாம் என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு பொதுபலசேனா அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள், விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் என தெரிவித்துள்ளார். 

மதத்தீவிரவாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்களுக்கு போதிக்கப்பட்டு அவர்களை தீவிரவாதிகளாக்குவதன் பின் விளைவுகளை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்கொள்ளநேரிடும்.

மேலும் குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகள் தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இலக்கு தற்போது பிரான்சிற்கு அச்சுறுத்தலாகியுள்ளது.

இந்நிலையில் விரைவில் இந்த அமைப்பின் இலக்கு இலங்கை பக்கம் திரும்பலாம் என்றஅபாயம் நிலவுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் புதிய விசா வழங்கும் திட்டமும் அவர்கள் நாட்டிற்குள் நுழையசாதகமான காரணியாகவுள்ளன.

தற்போது கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள் குருணாகல் பரகாதெனிய பிரதேசம், மாவனெல்லை மாளிகாவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மதரசா என்ற போர்வையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் மத தீவிரவாதத்தை பரப்பி வருகின்றன.

இது எமது நாட்டிற்கு எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் ஐ.எஸ். அமைப்பினை விடவும் கொடூரமான அமைப்புக்கள் உருவாகும் சாத்தியம் உள்ளன.

உலகில் இடம்பெறும் கடும் போக்கு வாதிகளின் தாக்குதல்களை நாம் விமர்சிக்கின்றபொழுது எமக்கு பலர் இனவாதியாக முத்திரை குத்துகின்றனர்.

இது தொடர்பில் சமூக பொறுப்புடன் செயற்படும் முஸ்லிம் தலைவர்களும் மௌனம் சாதித்து வருகின்றனர்.

பொதுவாக எல்லா சமூகத்திலும் கடும்போக்குவாதம் பேசப்படுவது இயல்பு. ஆனால் பொறுப்புணர்வு மிக்க மதத்தலைவர்கள் தொடர்ந்தும் மௌனம் சாதிக்கும் பட்சத்தில்அவர்களின் அமைதி போக்கு எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும்.

இந்நிலையில் தற்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் ஐ.எஸ்இயக்கத்தின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்.

இவர்கள் தாம் தீவிரவாத அமைப்பில் உள்ளோம் என தமது பெற்றோருக்கும் அறிவிப்பதில்லை. இவர்கள் அல்லாஹ் என்று இறைவனின் பெயரை கூறிவிட்டு எந்த தவறையும் துணிந்து செய்கின்றனர்.

இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் முஸ்லிம் சமூகத்தில் பொறுப்புணர்வு உள்ளவர்கள் அமைதிக்காக்க வேண்டியது அவசியம்.

அதோபோல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பிரான்சியர் அல்லாத வேறு இனத்தவர்களே வாழ்ந்தனர்.

அதனால் ஐ.எஸ் இன் தாக்குதலில் அதிகம் அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர்.

எனவே எதிர்காலத்திலும் இவ்வாறான தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில், ஐ.எஸ் இயக்கத்திற்கு மட்டுமல்லாது, முஸ்லிம் சமூத்திற்கு இவ்வாறான நிலைக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -