முதல்வர் விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் - சுமந்திரன் எம்.பி

டமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள சுமந்திரன் எம்.பி. அங்குள்ள வானொலியொன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளேன்.

எந்தவொரு அரசியல் கட்சியிலும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

அது அவர் ஓய்வுபெற்ற நீதியரசராக இருக்கலாம் அல்லது முதலமைச்சராக இருக்கலாம் கட்சிக்கு எதிராக செயற்பட்டால் அவரை நீக்கியே ஆகவேண்டும்.என்றார் சுமந்திரன் எம்.பி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -