மத்திய மாகாண தமிழ் சாகித்ய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு

 க.கிஷாந்தன்-
ட்டன் மாநகரில் 01.11.2015 அன்று கோலகலமாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இரண்டாம் நாள் அமர்வு 02.11.2015 அன்று காலை ஆத்மஜோதி நா.முத்தையா அரங்கமாக பெயர் சூட்டப்பட்டு டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட 02.11.2015 அன்றைய நாளின் முதல் அமர்வில் பாடசாலை மாணவர்களின் தமிழ் தாய் வாழ்த்துக்களுடன் ஆரம்பமான இவ்வைபவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக சேவையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர்க்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி சாகித்திய கௌரவம் வழங்கப்பட்டது. அத்தோடு சாகித்திய விழாவின் சிறப்பு மலர் வெளியீடும் இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் மத்திய மாகாண சபை உபதலைவர் ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மலையக தோட்டப்பகுதி வயோதிபர்களின் தலாட்டு, குலவி பாட்டு மற்றும் சமூக கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. முக்கியமாக கலாநிதி.ஆறு.திருமுருகன் இவரின் உரை இந்த அரங்கில் சிறப்பு பெற்றமை குறிப்பிடதக்கது.

அதைத்தொடர்ந்து இரண்டாவதாக இலக்கியகர்த்தா சாரல் நாடன் அவர்களின் அமர்வை ஆரம்பித்து வைப்பதற்காக அவரது குடும்ப உறவினர்களால் அவரது உருவப்படம் திரை நீக்கம் செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தோடு சான்றோர் கௌரவிப்பு, விருது வழங்கல் என்பன இடம்பெற்றன.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -