மகிந்தவுடன் எழுவோம் அமைப்பின் முக்கிய உறுப்பினர் அரசாங்கத்துடன் இணைவு..!

கிந்தவுடன் எழுவோம்” அமைப்பின் முக்கிய உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அலகப்பெரும நல்லாட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் டலஸ் அலகப்பெருமவிற்கு கபினட் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும நேற்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கேள்விகள் எதுவும் எழுப்பாமல் அதனை புறக்கணித்தமை குறுப்பிடத்தக்கது.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன மற்றும் களுத்துறை, கண்டி, கம்பஹா மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இன்னும் மூன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -