பி.எம்.எம்.ஏ.காதர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26வது பேராளர் மாநாட்டில் சமாந்துறையைச் சேர்ந்த கல்விமானும் அரசியல் ஆய்வாளரும் கவிஞருமான மன்சூர்- ஏ -காதிரை கட்சியின் அதி உயர்பீட செயலாளராக உயர்பதவி அந்தஸ்தினை வழங்கியதன் மூலம் சம்மாந்துறை மக்களையும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களையும் கெளரவப்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் தேசிய நிர்வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான கெளரவ ரவூப் ஹக்கீமுக்கு முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையுனுடைய வேட்பாளரும் இளம் அரசியல் பிரமுகருமான ஏ.எச்.எம் புவாத் நன்றியினையும் பராட்டுக்கனையும் தெரிவித்து ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார் .
தொடர்ந்தும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சியின் 26வது பேராளர் மாநாடு கண்டி பொல்கொல்ல மஹிந்த ராஜபக்க்ஷ அரங்கில் இடம்பெற்ற போது - கெளரவ தேசியத் தலைவரினால் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த பலருக்கு கெளரவ பதவியினை வழங்கியுள்ளார். அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.ஐ.எம் மன்சூரை தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராகவும் அரசியல் மற்றும் சமய விவகார செயலாளராக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ அன்சில் அவர்களையும் கல்வி மற்றும் காலாச்சார விவகார செயலாளராக அட்டாளைச்சேனை பழீல் பீ.ஏ யும் இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு விவகார செயலாளராக கிழக்கு மகாண சபை பிரதிநிதி அக்கறைப்பற்று ஏ.எல் தவல் அவர்களையும் தெரிவாக்கியுள்ளார்.
இவ்வுயர் பதவியையும் கெளரவத்தினையும் வழங்கியதன் ஊடாக எமது அம்பாறை மாவட்டத்தின் கட்சி முக்கியஸ்தர்களையும் போராளிகளையும் வாக்காளர்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கெளரவ படுத்தியுள்ளதுடன் சமூக மற்றும் பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுப்புக்களையும் மக்களின் நலன்களை பேணுவதற்குமான வாய்ப்புக்களை வழங்கியுள்ளார். என்று இளம் அரசியல் வாதி ஏ. எச்.எம் புவாத் (சமாந்துறை ) தனது ஊடக அறிக்கையில் சுட்டுக்காட்டியுள்ளார்.