எப்.முபாரக்-
திருகோணமலை புல்மோட்டைப் பிரதேசத்தில் மூன்று கிலோ கிராம் கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை அடுத்த மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(19) உத்தரவிட்டுள்ளது.
புல்மோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகேசன்புர பகுதியிலே குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளதாகவும், சந்தேக நபருக்கெதிராக திருகோணமலை உயர் நீதிமன்றில் இரண்டு கஞ்சா சம்பந்தமான வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கடந்த இம்மாதம் 12ஆம் திகதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக வேண்டி ஒரு வாரத்துக்கு தடுத்து வைத்து விசாரணைகள் செய்வதற்கு நீதிமன்றில் அனுமதி பெற்றுக்கொண்டதாகவும் புல்மோட்டைப் பொலிஸிர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்பு 35 வயதுடைய சந்தேக நபரை புல்மோட்டைப் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்பாடுத்திய போது குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிபதி கயான் மீ ஹககே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை புல்மோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
