இக்பால் அலி-
மிக நீண்ட நாட்களாக நிலவிய வந்த தண்ணீர்ப் பிரச்சினைக்கு புண்ணிய காரியம் புரிந்த சவூதி அரேபிய நாட்டு செல்வந்தருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்வற்கு வார்த்தையில்லை என்று மானவல்லை கல்வி வலயதின் அதிகாரி எம். எம். எஸ். பீ. மெகசூரிய தெரிவித்தார்.
தைபா மற்றும் கல்வி சமூக நல அமைப்பின் நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் மாவனல்லை கல்வ வலயத்திற்கு உட்பட்ட பஹல தம்போவிட்ட சிங்கள ஆரம்ப பாடசாலையில் சுத்தமான குடி நீர் வழங்கும் வைபவம் 18-11-2015 பாடசாலை அதிபர் எச். கே. எஸ். சீ. சுகததாச தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தைபா மற்றும் கல்வி சமூக நல அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஜே. ரிஸ்வான் மதனி நீர் விநியோகத்தை உத்தியோகபூர்வமாக மாணவர்களின் பாவனைக்காக கைளித்தார். அதில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட மானவல்லை கல்வி வலயதின் அதிகாரி எம். எம். எஸ். பீ. மெகசூரிய அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
இந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் ஒவ்வொரு பிள்ளைகளுடைய பெற்றோர்களும் வரிசை முறைப்படி தினசரி பாடசாகை;கு முட்டிகளில் தண்ணீர் சுமந்து வந்து கொடுத்தல் வேண்டும். இது இவர்கள் காலை வேலைக்குச் செல்லும் முன் இந்த வேலையை; செய்தல் வேண்டும். விசேடமாக இங்குள்ள பாடசாலை மாணர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய செயற்பாட்டுக்காக தண்ணீரை சுமந்து வந்து இங்கு வைத்தல் வேண்டும்.
பொதுவாக கூடுதலான புண்ணிய காரியங்கள் வசதி வாய்ப்புக்கள் உள்ள இடங்களில் நடைபெறுவதைத் தான் நாம் பார்க்கின்றோம். பிரதானமாக வசதி வாய்ப்புக்கள் உள்ள பாடசாலையாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய விடயங்காளக இருந்தாலும் சரி அவர்கள் தேடிப்பார்ப்பது யாருக்காவது சரி வழங்கிவிட்டு செல்வதை;தான் எமது சமூகத்தில் பெருவாரியானவர்கள் செய்து வருகின்றார்கள்.
வழங்கி விட்டால் போதும் என்ற நிலையிலேதான் உள்ளார்களே தவிர எங்கு அத்தியவசியமாகத் தேவைப்படுகிறது எனத் தேடிப்பார்ப்பத்தில்லை. எங்கு அத்தியவசியமாகத் தேவைப்படுகிறது எனப்பார்க்காமல் தான் உதவிகளைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
உண்மையிலேயே முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கொடுப்பது என்பது வலது கையால் கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் கொடுப்பார்கள் எனக் கேள்விபட்டுள்ளேன். இதைப் போலவே காருண்ணிய உதவி எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. சிலர் சிறியதைச் செய்து விட்டு பெரியளவில் விளம்பரத்தை எதிhபார்த்து இருக்கின்றனர். இந்தப் பாடசாலையில் எதிர்காலத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காகச் செய்யப்பட்ட பெரு உதவியாக இந்தச் சேவை அமைந்துள்ளனது.
பொது நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளும் போது அதற்காகப் பயன்படுத்தப் படும் உபகரணங்களைப் பார்க்கும் போது இன்று சந்தையிலுள்ள தரம் வாய்ந்த உபகரணங்கள் இந்த தண்ணீர் விநியோக நிர்மாணப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை நான் பெருமனதோடு வரவேற்கின்றேன். அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சகல அம்சங்களும் ஒரு நாளை பயன்டுத்தியதோடு மறுநாள் உடைந்து விடுகின்றன. இவர்கள் பயன்டுத்தியுள்ள உபகரணங்கள் தரம் வாய்ந்தவையாகும். நீண்ட காலம் பாவனை செய்யக் கூடிய தரம் வாய்ந்த உபகணரங்களாகும்.
கல்விச் சுற்று நிரூணத்தின்படி 100க்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள பாடசாலைக்கு மட்டும் தான் வளப்பங்கீடுகள் பகிர்ந்தளிப்பட வேண்டும் என கூட்டிக் காட்டப்படுகிறது. அதேபோல கனணி இயந்திரம் மற்றும் வேறு பங்கீடுகள் கூட இவ்வாறுதான் நடைபெறுகின்றது.
இந்தப் பாடசாலைக்கு நடந்துதான் வர வேண்டும். எனக்கு மோட்டார் சைக்கில் இருந்தாலும் நடந்து செல்லும் வகையில் தான் இந்தப் பாடசாலைக்கு பாதை அமைந்துள்ளது. நான்கு ஐந்து கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளேன். இவ்வாறு கஷ்டப்பட்டு இங்கு வந்து பார்க்கும் போதுதான் வேதனை எங்கள் உடம்புக்கு நன்கு விளங்குகின்றது. இங்கு கல்வி புகட்டும் ஆசிரியர்கள் வந்து போவது பற்றிய வேதனை அறிந்து கொள்ள முடிகிறது..
முஸ்லிம்கள் நோன்பு இருப்பது எளியவர்களின் வயிற்றுப் பசியை அறிந்து கொள்வதற்காகும். அதேபோல இந்தப் பாடசாலையின் நிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்து வரும் மிகவும் எளிய பிள்ளைகளின் எதிர்கால சுவிட்சமான வாழ்வுக்காக பாடுவது உதவி எம்முடைய மனதிற்கு ஆத்ம திருப்தியைத் தருகின்றது.
பெரியவிலான கவர்ச்சிகரமான பாடசாலைக்கு எல்லா வகையான சலுகைகளும் உதவிகளும் கிடைக்கின்றன. அதி கஷ்டப் பாடசாலைகளில் ஏழைப் பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைக்கு எவ்வகையான உதவிகளும் கிட்டுவதில்லை. இத்தகைய பௌதிக வளப்பற்றாக் குறையுள்ள பாடசாலைக்கு உதவி செய்வது என்பது அதிகளவிலான காருண்ணிய நன்மைகள் கிடைக்கும் என்பதுடன் இதற்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை .
இந்த நிதி உதவியைச் செய்த சவூதி அரேபியா நாட்டிலுள்ள செல்வந்தர் எந்த நோக்கத்திற்கான எண்ணத்துடன் உதவியைச் செய்தாரோ அந்த நோக்கம் நிச்சயமாக நிறைவேறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இங்கு தோட்டங்களில் பணிபுரியும் எளிய சிங்கள மக்களே உள்ளனர். இவர்கள் அன்றாட வாழ்க்கை நடத்திக் கொள்ள முடியாமற் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்கி வருகின்றார்கள். இவர்களின் பிள்ளைகளுக்காக செய்யப்பட்ட உதவி இந்த ஊரின் வரலாற்றில் அழிக்கப்பட முடியாத உதவியாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பறகஹதெனிய தாரூத் தவ்ஹீத் அஸ்ஷலிப்பாய்யா அரபு கல்லூரியின் சிங்கள் மொழிப் பாட ஆசிரியர் செய்யத் ஹசன், ஹெம்மாத்துகம பொலிஸ் நிலைய அதிகாரி, ஊர் முக்கிய பிரமுகர்கள் கலர் உரையாற்றினர்.
இதில் தைபா மற்றும் கல்வி சமூக நல அமைப்பின் அஷ்ஷெய்க் எம். ஜே. ரிஸ்வான் மதனி பாடசாலை அதிபருக்கு மற்றும் பொலிஸ் அதிகாரிக்கு ஜமாஅத் அன்சபிஸ் சுன்;னத்தில் முஹம்மதிய்யாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழி பெயர்ப்பு தர்ஜுமத்துல் குர் ஆன் அன்பளிப்பாக வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.





