எம்.ரீ.எம்.பாரிஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறைமை பற்றி விளக்கமளிக்கும் நிகழ்வும் “இயற்கை முறை விவசாயம் இயற்கைக்கும் விவசாயிகளுக்குமான ஒரு சமரசம்” எனும் நூல் வைபவ ரீதியாக வாகரைபிரதேச செயலக மன்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நூலினை வெளியிடுவதற்கான முழு ஆய்வினை கிழக்கு பழ்கலைகழக விவசாய பீடவிரிவுரையாளர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இயற்கை முறை விவசாயத்தை ஊக்கபடுத்தும் முகமாகவும் கடந்த யுத்தம், இயற்கை அணர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் தெரிவு செய்யப்பட்ட 600 பண்னையாளர்களுக்கு பயிற்சிகளும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான உள்ளிடுகளும் வழங்கப்பட்டிருத்தன.
இதன் மூலம் இன்றைய விவசாயத்தில் பெருமளவிலான இரசாயனஉரங்களும், பீடைநாசினிகளும் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சூழல் மாசடைவதோடு மனிதர்களினது ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது. மேலும் உற்பத்தி செலவு அதிகரிப்பதனால் விவசாயிகள் பெறும் இலாபம்குறைவடைவதோடு நுகர்வோரும் பெருமளவிலான பணத்தைச் செலவிட நேருகின்றது.
ஆனால் இயற்கை முறை விவசாயமானது சூழலுக்கு இணக்கமான விவசாயமுறை ஆகும்.
இவ்விவசாய முறையைக் கைக்கொள்வன் மூலம் சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பதோடு உற்பத்தி செலவுகளை கணிசமான அளவில் குறைக்க முடியும்.
இதனை வேள்ட்விசன் லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் கிழக்கு பழ்கலைகழகம், வாகரை பிரதேச செயலகம் 3 வருட காலமாக மேற்கொண்டுள்ள முயற்சியே இந்நூல் வெளியிடாகும் இதனை இலகுவான தமிழில்விவசாயிகள், பாடசாலை, பழ்கலைகழக மாணவர்கள் புரித்து கொண்டு இயற்கை முறைவிவசாயத்தை மேற்கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
இந்நூல் வெளியிட்டானது வேள்ட்விசன் லங்கா நிறுவனத்தின் வாகரை பிராத்தியமுகாமையாளர் வோனிவின்சன் தலைமையில் இடம் பெற்றது இதில் கிழக்கு பழ்கலைகழக விரிவுரையாளர்கள், பிரதேச செயலாளர், விவசாய தினைக்கள அதிகாரிகள், கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கிழக்கு பல்கலை கழக விரிவுரையாளர் கலாநிதி எஸ்.சுதர்சன் மாட்டத்தில்மேற்கொள்ளப்படும் விவசாய முறைமை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.








