நியூசிலாந்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த 4 பேர், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஹெலிகாப்டர் ஓட்டுனர் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுற்றுலாப் பகுதியான தெற்கு தீவில் உள்ள பொக்ஸ் பனிமலை பகுதியிலேய தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளகியுள்ளது. விபத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும், ஒருவரும் உயிர்பிழைத்திருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், மோசமான வானிலை நிலவுவதால் சடலங்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
