அக்கரைப்பற்று வரலாற்றில் அதாஉல்லாஹ் என்னும் நாமத்தை யாராலும் மறைக்க முடியாது..!

க்கரைப்பற்று வரலாற்றில் அதாஉல்லாஹ் என்னும் நாமம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தமை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

எனவே அப்படியான ஒருவரை இன்று அவ்வூர் இழந்து முகவரியற்றவர்களாக அலைந்து திரிவதனைப் பார்த்து இன்றைய புதியவர்கள் ஏழனம் செய்கின்றனர்.

அதாவது அதாஉல்லாவைத் தோற்கடித்து ஏனையவர்களை அக்கரைப் பற்றுக்கு கொண்டுவருவதன் நோக்கம் என்ன? அக்கரைப்பற்றின் சேதமாக்கலின் முக்கிய பங்கினை வகித்தவர்களை அதாஉல்லாவுக்குப் பதிலாக நியமிக்க நினைக்கும் கோதாரிகள் யார். அக்கரைப்பற்று மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் செல்வதனை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் விரும்பினால் செல்லலாம். ஆனால் அதாஉல்லாஹ்வுக்கு பதிலாக இன்னுமொருவர் இவ்வூரில் அரசியலுக்குள் நுளைய முன்வரவில்லை என்பதுவே உண்மை.

எனவே அக்கரைப்பற்றுக்கு அரசியல் முகவரி கொடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அக்கரைப்பற்று மக்கள் ஒருபோது மறக்கவில்லை, அக்கட்சிக்கு கொடுக்கும் மரியாதையை அக்கட்சியால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான அதாஉல்லாவுக்கு கொடுத்தனர். ஆனால் அது தொடர வேண்டும் அதாஉல்லாஹ் தனது பழைய வீட்டுக்குத் திரும்ப வேண்டும். எங்கள் அதா எங்களுக்கே வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடிவெர்களாகத் திகழ்ந்தவர்கள் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், அவருடன் பிரிந்து சென்றவர்கள் மற்றும் அதாஉல்லாஹ் போன்றோர் அக்கட்சியில் மீண்டும் இணைந்து கட்சியைப் பலப்படுத்துவதுடன் மக்களின் விரும்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அக்கரைப்பற்றுக்கு அதாஉல்லாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்கும்போது எதிர்த்தவர்கள் இன்று உள்ளே வந்து இக்கட்சியில் இடங்களைப் பிடித்து விட்டு, உள்ளே இருப்பவர்களை கொத்தி விரட்ட நினைப்பது அபாயகரமானது.

இது மக்களுக்கான கட்சி இலங்கை முஸ்லிம்களின் கட்சி யாரும் வரலாம் யாரும் போகலாம் மறைந்த தலைவர் அழகாய் வடிவமைத்த யாப்பின் கூற்றும் அதுவே. எனவே வருவோரை வரவேற்க்கவேண்டும். அதாஉல்லா, உதுமாலெப்பை அவர்களின் ஆதரவாளர்கள் புடைசூள கட்சிக்குள் நுளையும் சந்தர்ப்பம் விரைவில் வரலாம். அதனை அரவணைக்க கட்சித் தொண்டர்கள் கனவுடன் காத்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவ வேண்டுமே தவிர, வரவேண்டாம் சேர்க்க மாட்டோம் என்று கூறுவது முட்டாள்தனமானது. எனவே முஸ்லிம்களுக்காக நம் தாய்மார் கண்ணீர் சிந்தி வளர்த்த இக்கட்சி பல துண்டுகளாக உடைந்து சென்றமை பகல்கனவுகளாக நினைத்து மறந்து அனைவரும் ஒன்று சேர்வோம்.

நாளை றிஷாத்தும் வரலாம், அதனால் ஹக்கீம், றிஷாத்ம் அதாஉல்லா என்ற பழைய உறவுகள் ஒன்று சேருகின்றபோது பலமான கட்சியாக மீண்டும் பரினாமம் எடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் எனவே யாரும் யாதும் பேசலாம் மக்கள் நம்பிக்கையுடன் அனைவரையும் ஒன்று சேர்க்கும் பணியைச் சரிவர செவ்வனே செய்வர் என்பது நன்றாகப் புரிகிறது.


எதுவும் கேட்காத எருமை.
அக்கரைப்பற்றின் ஆயுட்கால
போராளி ஸ்ரீ.மு.காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -