நிஸ்மி-
ஆசிரியப் பணி என்பது இறைவனால் வழங்கப்படுகின்ற மிகப் பெரும் பாக்கியம் அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஒளியூட்டுபவர்கள். அறிவும், திறமையும், ஒழுக்கமுமுள்ள சமுதாயத்தை உருவாக்குகின்ற மிகப் பெரும் சிற்பிகள். இவர்களின் அர்ப்பணிப்புடனான சேவையின் மூலம் எமது சிறார்களின் எதிர்காலம் ஒளிமயமாக மாறுகின்றது. இவ்வாறான சிறந்த பணியினையாற்றும் ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் என்று தெரிவித்தார் அக்கரைப்பற்று காதிரியா மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் யூ.எல்.அப்துல் றஹ்மான்.
நேற்று (06) இடம் பெற்ற சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று காதிரியா மக்கள் சேவை மன்றத்தின் காதிரியா ஆங்கில பாலர் பாடசாலையில் இன்று (06) செவ்வாய்க்கிழமை சர்வதேச ஆசிரியர் தினமும் ஆசிரியைகள் கௌரவிப்பு நிகழ்வும் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
அக்கரைப்பற்று காதிரியா மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் யூ.எல்.அப்துல் றஹ்மான் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று சிறுவர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உத்தயோகத்தர் ஜனாபா எஸ்.கரீமா, காதிரியா வித்தியாலய அதிபர் எம்.எச்.பரீட் மற்றும் காதிரியா ஆங்கில பாலர் பாடசாலையில் இதுவரை கற்பித்த ஆசிரியைகள் மற்றும் காதிரியா மக்கள் சேவை மன்றத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.ஏ.சுக்கூர், போஷகர் ஏ.எல்.ஆதம் லெவ்வை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வருகை தந்த காதிரியா மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் யூ.எல்.அப்துல் றஹ்மான் உள்ளிடட அதிதிகள் உட்பட இங்கு இதுவரை கற்பித்த ஆசிரியைகள் தற்போது கற்பிக்கும் ஆசிரியைகள் உட்பட அனைவரும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்கள்.
இதன்போது இதுவரை கற்பித்த ஆசிரியைகள் தற்போது கற்பிக்கும் ஆசிரியைகள் உட்பட அனைவரும் அதிதிகளால் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
அக்கரைப்பற்று சிறுவர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உத்தயோகத்தர் ஜனாபா எஸ்.கரீமா, காதிரியா வித்தியாலய அதிபர் எம்.எச்.பரீட் உள்ளிட்டோரும் உரையாற்றினார்கள்.