கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு விவகாரத்தை பக்குவமாக கையாளவேண்டிய நிலை தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தற்போது மாகாண சுகாதார அமைச்சு புதாகரமாக மாறிவருவதோடு இது தொடர்பாக, தங்களது ஊர்களுக்கும் மற்றும் மாவட்டத்திற்கு வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புகள் மேலோங்கி இருக்கின்ற இத்தருணத்தில் கட்சியின் போராளிகள் உரிமைப் போராட்டம் நடாத்தும் சூழல் உருவாகியுள்ளது.
இவ்வாறிருக்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு விவகாரத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு வழங்குவது தொடர்பில் சாதகமான பல கருத்துக்கள் பல்வேறு தரப்பினர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
கட்சியை பாதுகாத்து எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கும் கட்சி பிளவுபடும் சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க வேண்டிய பொறுப்பும் தலைமையிடம் உள்ளது.
ஆகவே பொறுப்புடன் கூறுகின்றோம். திருகோணமலை மாவட்டத்திற்கு சுகாதார அiமைச்சு தரப்பட வேண்டும் என நாங்கள (திருகாணமலை மாவட்ட ஸ்ரீல.மு.க. போராளிகள்) வெளிப்படையாக கூறுகின்றோம், பொருத்தமான தருனத்தில் தலைமை இது தொடர்பான நியமனத்தை வழங்கும் என்று நாங்கள நம்புகின்றோம்;.
தலைமைத்துவம் மூடி மறைத்து செல்கின்றதென திருகோணமலை மாவட்ட கட்சிப் போராளிகள் ஆதங்கப்படத்தேவையில்லை, பக்குவமாக இவ்விடயத்தை கையாள வேண்டிய சூழ்நிலை தலைமைத்துவத்திற்கு உள்ளது. தலைமைத்துவம் சரியான விடயத்தை சரியான நேரத்தில் செய்ய வேண்டும். சரியான விடயத்தை பிழையான நேரத்தில் சரியென நினைத்து செய்வது பிழையாகி விடும் என்று தலைமைக்கு தெரியும். ஆகவே திருகோணமலை மாவட்டத்திற்கு அவ்வமைச்சு வழங்கப்பட வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மூதூரிலும், புல்மோட்டையிலும் மாகாண சபை உறுப்பினர்களை பெரும் போராட்த்தின் மத்தியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதை தலைமையும் அறியும். தற்பொழுது, திருகோணமலை மாவட்டம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்ற இவ்வேளையில் திருகோணமலை மாவட்டத்திற்கு சுகாதார அமைச்சை வழங்காமல் இருக்க முடியுமா? என தலைமையிடம் கேள்வியெழுப்புகின்றோம்.
திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்;.தௌபீக் திறமையானவர், சிறந்த முறையில் சேவையாற்றக்கூடியவர், எமது கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுள் மிக வேகமான துடிப்பான ஒருவர் அவரையும் கட்சி எப்போதும் இழக்கக்கூடாது. பிரதியமைச்சர் பதவி வழங்கும்போது முதலில் தலைமைத்துவம் திருகோணமலை மாவட்டத்திற்கே வழங்கியது. அதற்காக மீண்டுமொரு முறை தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எனவே, சுகாதார அமைச்சை காலம் தாழ்த்தாமல் திருகோணமலைக்கு (ஆர்.எம்.அன்வருக்கு) வழங்க தலைமை முன்வர வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகள், உயர்பீட உறுப்பினர்கள், ஊர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு இதனை முன்னெடுக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.