எப்.முபாரக்-
திருகோணமலை சூரியபுர காந்திக்குளம் வீதிகள் 25 வருடங்களின் பின்பு இன்று திங்கட்கிழமை (19) அப்பிரதேச மக்களினால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
நீண்ட காலமாக கவனிப்பாரற்று காணப்பட்ட இப் காந்திக்குள வீதிகள் எந்த அரசியல் வாதிகளோ இவ்வீதியை புனரமைத்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் தாம் இக்கிராமத்தில் வாழுகின்ற மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அச்சிரமதானப் பணிகளை மேற்கொண்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
25 வருடங்களாக இவ்வீதியின் பாவனை தமக்கு முக்கியத்துவமாக தென்படவில்லையெனவும் தற்போதைய காலகட்டத்தில் போக்குவரத்து தேவையாக உள்ளதை கருதியே தாம் இதனை மேற்கொள்வதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

