மலையகத்தில் பெய்யும் மழை காரணமாக விவசாயிகள் பாதிப்பு..!

க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல் வேளைகளில் பெய்து வரும் மழை காரணமாக தோட்டங்களில் வைக்கப்பட்ட மரக்கறி வகைகள் அழுகிப் போவதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

தொடர்ந்து பெய்யும் மழையினால் எமது மரக்கறிக் கன்றுகள் அழியும் நிலமையை எதிர் நோக்கியுள்ளோம் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியிலும் நுவரெலியா மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மரக்கறி வகைகள் அழுகியது. இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் நோக்கி இருந்தனர்.

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்கள் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்தவகையில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் ருவான்புர பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையை அடுத்து விவசாயிகளின் மரக்கறி தோட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -