சுலைமான் றாபி-
அம்பாறை மாவட்ட விவசாயிகள் ஒன்றியம் (Lanka Famers Forum) இம்மாவட்ட விவசாயிகளின் நீண்டகால பிரச்சினைகள் அடங்கிய மஹஜர் ஒன்றினை இன்று (11) சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிமை அவரது அமைச்சின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் :
அம்பாறை மாவட்ட விவசாய ஒன்றியத்தின் நீண்டகால பிரச்சினை குறித்து நான் அறிவேன். இதில் சில பிரச்சினைகள் சம்பந்தமாக ஏற்கனவே குறித்த நிறுவனங்களுடனும், பொறியியலாளர்களுடனும் தொடர்பு கொண்டு அவைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளேன். அவற்றுள் காணி அனுமதிப்பத்திரம், காணி எல்லைகள் சம்பந்தமாக பிரச்சினைகளுக்கு மிகவிரைவில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காணி அமைச்சர் உள்ளிட்டோர்களுடன் கட்சி விரிவானதும், காத்திரமானதுமான பேச்சுவார்த்தையை நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இவ்வமைப்பினரின் நெல் கொள்வனவும் சந்தைப்படுத்தலும், விவசாயக்காணிகளுக்கான நீப்பாசன வாய்க்கால்கள் மற்றும் வயல்களுக்கிடையே போக்குவரத்துப் பாதைகள் அமைப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் அமைப்பின் தலைவர் எம். ஐ. காதர் அடங்கிய குழுவினரால் கையளிக்கப்பட்டது.