ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதிகள் கிழக்கு முதலமைச்சரைச் சந்தித்தனர்.

க்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதி நிதி சப்னை நண்டி
அவருடன் இணைந்த உலக வங்கி பிரதிநிதி, ஐ.எல்.ஓ நாட்டுப்பிரதி நிதி, யுனிசெப், உலக உணவுத்திட்ட அதிகாரிகள் ஆகியோர் கொண்ட இருபது பேர் அடங்கிய குழுவினர் நேற்று (05) காலை 10 மணிக்கு கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் கிழக்கு மாகாண கூட்டமண்டபத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பல முக்கிய விடையங்கள் பேசப்பட்டன.

இங்கு வருகை தந்திருந்தோரிடம் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

மீள்குடியேற்றங்கள் சம்மந்தமாக முதலமைச்சர் கூறுகையில் சம்பூரில் இருந்து வெளியேறிய மக்களை சரியான முறையில் அவர்களை அங்கு குடியேற்ற வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன்

கிழக்கில் படித்து விட்டு தொழிலின்றி இருக்கும் இளைஞர்களின் விடையத்தில் அவசரமாகத் தலையிடவேண்டும். அவர்களுக்கு தொழில் வழங்குவதில் அவசரமாக முடிவுகள் எட்டப்படவேண்டும். மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக வறிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சென்று பெரும் துயரத்தைச் சம்பாதிக்கிறார்கள் அதனைத் தடுத்து அதற்கான தொழில் ஏற்பாடுகள் இங்கு செயற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன், இளைஞர் யுவதிகளுக்கு பல துறைகளிலும் தொழிற்பயிற்சிகள் வழங்கவேண்டும்.
என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அங்கு வருகை தந்திருந்த ஐ.நா தூதுக் குழுவினரிடம் எடுத்துக்கூறினார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -