எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பொன்.சந்திரேஸ்வரன் இடமாற்றசபை 2015/2016 தொடர்பாக திருகோணமலை வலயத்தில் இம்முறை சரியாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தங்களால் 29-01-2015அனுப்பப்பட்ட Ep/20/01/33 இலக்க சுற்று நிருபத்திற்கு முரணாக திருகோணமலை கல்வி வலயத்தில் இடமாற்ற சபை அமைவதை காணக்கூடியதாக உள்ளது.உறுப்பினர்கள் தொடர்பில் தாபனக்கோவை (111)இன் அத்தியாயம் 3-5(அ)மற்றும் (ஆ)விதிகள் பின்பற்றப்பட வில்லை.
தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என்பது தொழிற்சங்க ஆணையாளரினால் அனுமதி வழங்கப்பட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையே சாரும். இவ்வாறு தொழிற்சங்க ஆணையாளரினால் அனுமதி வழங்கப்படாததும் தேவையான அங்கத்தவர்களை கொண்டிராத சங்க பிரதி நிதிகள் பங்கு பற்றுவது கேலிக்கூத்தாகும்.
எனவே தாங்கள் மேற்படி விடயங்களை கருத்தில் கொண்டு வினை திறனான இடமாற்ற சபையை கொண்டு நடாத்த வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் படி கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
