AC யும் ஒரு ரூமும் போதும் அமைச்சரிம் கேட்ட வைத்திய அதிகாரி -அட்டாளைச்சேனையில் சம்பவம்

அவதானி-

ன்று மாலை சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஷல் காசிம் மற்றும் அமைச்சின்  நிருவாகக் குழு அதிகாரிகளும் அம்பாரை மாவட்டத்தின் பல வைத்திய சாலைகளுக்கும் விஜயம் செய்து வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள், தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

குறிப்பிட்ட விஜயத்தின்போது அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு விஜையம் செய்த பிரதி அமைச்சர் வைத்திய அதிகாரியிடம் உங்கள் வைத்தியசாலையின் தேவைகள் என்ன என்ற கேள்விக்கு எங்களுக்கு ஒரு AC மற்றும் தாதிமாருக்கு தங்கும் அறையும் அமைத்துத் தருமாறு கூறியிருக்கிறார். இதனைப் பார்வையிட்ட பிரதி அமைச்சரோ உங்கள் வைத்திய சாலைக்கு இதுதான் தேவையென்றால் நான் அம்பாறையிலேயே பெற்றுத்தந்திருப்பேன். நீங்கள் பெரிதாக ஏதும் கேட்பீர்கள் என்ரு நினைத்தேன் உங்களுக்கு ஒருதேவையுமே இல்லை பறவாயில்லை என்று பதில் கூறியிருக்கிறார்.



இதேவேளை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மகிபால மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் வைத்தியசாலைகளுக்கு மிக அவசரமாக தேவைப்படும் அனைத்து தேவைகளையும் மிக துரிதமாக செய்து தருவதாகவும் வாக்குறுதியளிதமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -