ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகவும், அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்பதற்காகவும் சிரியா நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ராணுவம் போர் பயிற்சி மற்றும் உதவி அளித்து வருகிறது.
இந்தநிலையில் சிரியா ஜனாதிபதி பசார் அல் ஆசாத்தின் வேண்டுகோளின்படி ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை சிரியாவில் ரஷியா நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் ரஷியாவின் 13-வது டிவிஷன் போர்விமானங்கள் சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள கான் ஷெய்குன் என்னும் கிராமத்தின் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. 24 மணி நேரத்தில் 67 முறை குண்டுகள் வீசப்பட்டன.
இந்த தாக்குதலில் அந்த கிராமத்தில் இருந்தவர்களில் 300 பேர் பலியாயினர். ஆனால், இவர் கள் அனைவரும் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என ரஷ்யா தெரிவிக்கிறது.
ரஷிய விமானங்கள் கான் ஷெய்குன் கிராமத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கருதி இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரம், தீவிரவாதிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா குண்டு வீசுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்து இருக்கிறது.ETHESAM
