இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தின் இலவச கண் சிகிச்சை முகாம் இம்மாதம் 25ஆம் திகதி கொழும்பில்!

நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்-

ளம் முஸ்லிம் மாதர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இலவச கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 25.10.2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு தெமட்டகொடை வீதியிலுள்ள வை.எம.;எம்.ஏ.மண்டபத்தில் நடைபெறும்.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொள்வார். கண்பார்வை குறைந்த சுமார் 300 பேருக்கு இந்த கண் சிகிச்சை முகாமில் இலவச மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்படவிருப்பதாக இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தெரிவித்தார்.

சிறந்த கண் சிகிச்சை நிபுணர்களால் நடத்தப்படும் இந்த கண்சிகிச்சை முகாமில் கலந்துக் கொண்டு தமது கண்களைபரிசோதித்;துக்கொள்ள விரும்புவோர் இளம் மாதர் முஸ்லிம் சங்க பொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹாவின் 0714697009 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறும் தேசமான்ய மக்கியா முஸம்மில் சகலரையும் கேட்டுக் கொள்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -