வங்கியொன்றின் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து பணத்தைத் திருட முயன்ற நபரொருவரை வங்கிக்குள் வைத்தே பொலிஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் ஒன்று 13.09.2015 இன்று நள்ளிரவு நடைபெற்றுள்ளது.
மேற்கு மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள மக்கள் வங்கிக் கிளையிலேயே இந்தக் கொள்ளை முயற்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வங்கியின் உள்ளே புகுந்த திருடன் பாதுகாப்புப் பெட்டகம் இருந்த அறையின் கதவில் ஓட்டை போட்டு உள்ளே நுழையும்போது பாதுகாப்பு அலாரம் செயற்பட்டு, இங்கிரிய பொலிசில் அபாய எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் வங்கியை விட்டு திருடன் வெளியேறும் முன்பதாகவே அவனை மடக்கிப்பிடித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில்,
அப்பிரதேசத்தில் மலர்ச்சாலை நடத்தும் ஒருவரின் மகனே கடன் தொல்லை காரணமாக வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
அப்பிரதேசத்தில் மலர்ச்சாலை நடத்தும் ஒருவரின் மகனே கடன் தொல்லை காரணமாக வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் கொண்டு வந்திருந்த இயந்திர உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை பதில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி விளக்கமறியலில் அடைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

