07.09.2015 இன்று காத்தான்குடி மிருக வைத்தியசாலையில் வறிய குடும்ப, கோழி வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்களின் குடும்ப நல திட்டத்தின் கீழ் கோழி வளர்க்கும் வறிய குடும்பங்களை ஊக்குவிக்கும் முகமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் (பொறியாளர்) அவர்களினால் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி மிருக வைத்திய அதிகாரி, வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கோழி வளர்க்கும் ஏழைக் குடும்பங்கள் கலந்து கொண்டதோடு தங்களுக்கான கோழிக் குஞ்சுகளையும் பெற்றுச் சென்றனர்.


