எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ஆதரவாளர்கள் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட மேற்கொண்ட முயற்சி ஆரம்பித்த இடத்திலேயே முடங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த கூட்டணியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி இணங்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தி வரலாற்று துரோகியாக தன்னால் முடியாது என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்திற்கு ஏற்ப தான் எதிர்காலத்தில் செயற்பட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கவில்லை என்றாலும் வீட்டில் இருந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச, அவருடன் இருந்த சில அரசியல்வாதிகளின் தூண்டுதல் காரணமாவே இந்த நிலைமைக்கு வந்துள்ளார். எவ்வாறாயினும் இவர்களின் தூண்டுதல் பிரகாரம் வெற்றியை பெற மகிந்த ராஜபக்சவினால் முடியாமல் போனது.
இந்த நிலையில், மகிந்த தற்போது எடுத்துள்ள முடிவு காரணமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகிய மகிந்த ராஜபக்சவின் சகாக்களுக்கு செல்வதற்கு இடமில்லாது போயுள்ளது என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
