அழகே!அழகு(கவிதை)

ஆழிக் கடல் பேரழகு
ஓலமிடும் அலையழகு
திட்டமாய் ஓடும் படகு முட்டி
கரைமோதும் தண்ணி
அழகே! அழகு

அவலக்குரல்  இழுக்கானும்
அலவக்கரை ஆக்களும்
கிண்டிநுழை நண்டுகளும்
திண்டு உலா காக்கையும்
தேங்கி தேடும் கீச்சானும்
அழகே! அழகு

அள்ளி விளையாடும் மண்ணு
துள்ளியாடிவரும் பெருந்தண்ணி
தூர தள்ளிவரும் பெரும்சிப்பி
நேர  ஓடி விலகும்  நண்டு
எண்ணி விளையாடும் சங்கு
அழகே! அழகு

தலைப்பாகை மீனவனும்
தள்ளி ஓடும் தோணியும்
மன்றாடும் மந்து வலையும்
திண்டாடும் மீன்கள் நிலையும்
அழகே! அழகு

கும்பி மணல் மேடு
நம்பியடிக்கும்  குளிரு
தங்கி வாழும் குடிலு
ஓங்கியடிக்கும் கடலு
அழகே! அழகு.

காற்று வாங்க கூடி
தோண்டி மணல் கூட்டி
தொன்றி எழும் மனக்காட்சி
கோலமிடும் கண்காட்சி
அழகே! அழகு


அக்கரை ஊர் கவிஞன்
  ஏ. எச்.ஜூனைடீன்
   அட்டாளைச்சேனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -