சுலைமான் றாபி-
உலக சமாதான தினத்தை முன்னிட்டு கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த சர்வதேச சமாதான நிகழ்வு இன்று (21) நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கொண்டாடப்பட்டது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம்,கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்.ஏ.எம்.றசீன், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் அதிபர் திருமதி என்.யூ.எச்.எம். சித்தீக் உள்ளிட்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் முக்கிய கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை சர்வதேச சமாதான தினத்தினை வலியுறுத்தி நிந்தவூர் அஸ்-ஸபா வித்தியாலய மாணவர்களினால் ஊர்வலமொன்று இடம்பெற்றதோடு மாணவர்களின் கலைக் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

