தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணி ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
நாகானந்த கொடித்துவக்கு என்ற சட்டத்தரணியே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களால் நிராகரிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பிரதான கட்சிகள் உட்பட்ட பல கட்சிகள் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை அளித்துள்ளன. சிலர் அமைச்சு பதவிகளையும் பெற்றுள்ளனர்.
இது மக்கள் ஆணையை மீறும் செயல் என தெரிவித்து குறித்த சட்டத்தரணி, சுதந்திர சதுக்கத்தில் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.