தமக்கு அலுவலகம் வழங்கப்படவில்லை என முறைப்பாடு செய்வதற்காக சென்ற புதிய அமைச்சர் ஒருவரை, பிரதமர் திட்டியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தயா கமகேவே இவ்வாறு பிரதமரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.
சிறு கைத்தொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி ஆகிய துறைகள் தயா கமகேவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான் எவ்வாறான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தயா கமகேää ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுள்ளார்.
ஆக்கபூர்மான பணிகளை மேற்கொள்ள சிறந்த அமைச்சுப் பதவி வழங்கியுள்ள நிலையில் இவ்வாறான கேள்விகளை கேட்காமல் கிராமங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும்,
77ம் ஆண்டு நானும் இவ்வாறுதான் செய்தேன். தேங்காய்த்தும்பு உற்பத்திகளை மேற்கொண்டால் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்ட முடியும் என ரணில் கூறியுள்ளார்.
அமைச்சுப் பதவியை வகிக்கும் தமக்கு ஒர் சரியான அலுவலகம் கூட இல்லை என தயா கமகே முறைப்பாடு செய்துள்ளார்.
தற்போதைக்கு பிரதி அமைச்சரான உமது மனைவி அனோமா கமகேயின் அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளும், பிறகு அலுவலகம் பற்றி பார்க்கலாம் என ரணில் கூறியுள்ளார்.
நாட்டில் பாரிய பிரச்சினைகள் இருக்கும் போது இவ்வாறான சில்லறைப் பிரச்சினைகளுக்காக தலைவர்களிடம் முறைப்பாடு செய்யும் அனைவருக்கும் இந்த நல்லதொரு பாடமாக அமைந்துள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
