மச்சினிக்கு கரம் கொடுக்கும் தல..!

டிகர் அஜித் சிறந்த நடிகன் மட்டும் இல்லை இவர் ஒரு பன்முக வித்தகர் என்று சொல்லலாம் அமங்க சிறந்த கார் மற்றும் பைக் ரேசர் அது மட்டும் இல்ல சிறந்த புகைப்பட நிபுணர் சிறந்த நளபாகசக்கரவர்த்தி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அஜித் ஓய்வு நேரங்களில் கேமராவுடன் அதிகம் பார்க்கலாம் .

நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினியின் சகோதரி ஷாமிலி தமிழ் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளதை அடுத்து, அவரது ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் நடிகர் அஜித் குமார்.

‘அஞ்சலி’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, தொடர்ந்து 60 படங்களுக்கு மேல் நடித்தார். நாயகியாக அவர் தெலுங்கில் ‘ஓய்’ படம் மூலமாக அறிமுகமானார். பின் 5 வருடங்கள் சிங்கப்பூரில் படிப்பதற்காக சென்ற ஷாமிலி தற்போது தனுஷுடன் ஒரு படம், விக்ரம் பிரபுவுடன் ஒரு படம் என நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஷாமிலி நடிக்க முடிவெடுத்தவுடன் அவரது குடும்பத்தினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தனது அக்காவைப் போல, குடும்பப் பாங்கான பாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள ஷாமிலிக்கு அஜித்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளார். புகைப்படக் கலையில் ஆர்வமுள்ள அஜித், சென்ற வாரம் ஷாமிலியின் ஃபோட்டோ ஷூட் ஒன்றையும் எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஷாலினியை கரம் பிடிக்க அஜித்குமாருக்கு கிடைத்த முதல் ஆதரவு ஷாமிலி தான். இதற்காக நடிகர் ஷாரூக்கானை பார்க்க வேண்டும் என்ற ஷாமிலியின் ஆசையை அஜித் நிறைவேற்றினார். இன்றுவரை தான் ஷாரூக்கின் ரசிகை தான், அது மாறாது என்கிறார் ஷாமிலி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -