பிரதமர் ரணில், மோடி சந்திப்பு - 4 ஒப்பந்தங்களில் கைச்சாத்து (Video)

த்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டெல்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில் அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இதன்போது, ஜெனிவா மாநாடு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுப் பிரதமர்களும் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில்;

பயங்கரவாத ஒழிப்பில், இந்தியா உடன் இணைந்து செயல்படுவோம். பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான செயல்பாடு நிலவிவருகிறது.

இலங்கை பாராளுமன்றத்தில், அனைத்து கட்சிகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. முதல் பயணமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவிற்குதான் வந்தார், நானும் முதல் முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது, என ரணில் குறிப்பிட்டார்.

அதேவேளை சார்க் வலய செய்மதியினை பரிமாற்ற நடவடிக்கைகள், வவுனியா மாவட்ட வைத்தியசாலை நவீனமயப்படுத்தல், சிறு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குதல், இந்தியாவின் 17 பிராந்தியங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் அவசர சிகிச்சை சேவை அனுபவத்தை இலங்கைக்கும் வழங்குதல் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -