மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட விபரீதம் சம்மந்தமாகக் கிடைத்த தகவலாவது:
ஹஜ் புனித யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் மினாவில் கூடியிருந்த போது நெரிசல் ஏற்பட்டது. மினாவில் ஷைத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
2 வாரத்தில் இரண்டாவது முறையாக மக்காவில் மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி மக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் உயரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.