இந்திய ஏற்றுமதி கண்காட்சி 2015 - றிசாத் பதியுதீன் பிரதம அதிதி

காதர் முனவ்வர்-

ந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015 (2015-09-11) வெள்ளிக்கிழமை வைபவரீதியாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் 50க்கும் மேற்பட்ட முன்னணி கைத்தொழில், வர்த்தகம், விசாயம், மருந்தகம், கட்டிட நிர்மாணிப்பு, ஆடை தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம், சக்தி வளத்துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தமது தாயரிப்புக்களை காட்சிபடுத்துகின்றன.

இந்திய மற்றும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவை வளர்ப்பதில் இலங்கையின் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் ஒரு வலுவான துாணாக இயங்கிவருவதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -