பாகிஸ்தான் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான 20 க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மதானித்தது.
இதன்படி, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.
ஆட்டநாயகனாக பாகிஸ்தான் சார்பாக 4 விக்கட்டுகளை வீழ்த்திய இமாட் வசீம் தெரிவானார்.
இரண்டு போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடரில் பாகிஸ்தான் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
