எம்.வை.அமீர்-
நடந்து முடிந்த பாராளமன்ற தேர்தலில் பலத்த போராட்டத்துக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி கூறுவதுடன் நடந்து முடிந்த போராட்டத்தில் வெற்றியீட்டியவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் நகரஅபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள ஒனாளி ஹோல்டிங் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஏ.சீ.யஹ்யாகான் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
என்றுமில்லாதவாறு நெருக்குதல்களும் கழுத்தறுப்புகளும் பிரதேசவாத பேச்சுக்களும் நிறைந்திருத்த கடந்த தேர்தலில் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் வெற்றி வியூகத்தை நடைமுறைப்படுத்தி கட்சியை தூக்கி நிமிர்த்தியுள்ள தற்போதைய தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களது தூர நோக்கிலான சிந்தனைக்குக் கிடைத்த பரிசாகவே இவ்வெற்றியை தான் நோக்குவதாகவும் கட்சியுடன் இணைந்திருந்து இன்னும் பல வெற்றிகளை நம் அடைய பிராத்திப்பதாகவும் வாக்களித்தவர்களுக்கு மீண்டும் நன்றி கூறுவதாகவும் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவதுடன் அவர்கள் வாக்களித்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற தங்களை தியாகம் செய்ய வேண்டும் என வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
