கட்சியையும், தலைமையும் வெற்றிகொள்ள காரணமாக இருந்த உங்களுக்கு எனது நன்றிகள் -நஸீர்

அபு அலா –

ம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டமுஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூன்று ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியைபெற்றுள்ளது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் இன்று (18) தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் முன்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீரின் வருகையை எதிர்பார்த்து நின்ற பொதுமக்களுக்கு உரை நிகழ்த்தும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அட்டாளைச்சேனை பிரதேச எமது கட்சிப் போராளிகள் எமது பெற்றி விழாவை ஒரு அமைதியான முறையில் கொண்டாட வேண்டும்.

இன்று முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால்காசிம் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகிய 3 வேட்பாளர்களும் கூடிய விருப்புவாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் கண்டியில் எமது தலைவர் ரவூப்ஹக்கீமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அலிசாஹிர் மௌலானாவும் கூடிய விருப்புவாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த சந்தோஷமான செய்தியை எமது மு.காவின் போரிகளுக்கு தெரிவிப்பதில் பெரும் சந்தோஷமடைகின்றேன்.

எமது கட்சியின் தலைமை இன்முறை வகுத்த மிக சானாக்கிய அரசியல் நகர்வின் மூலம் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட 3 வேட்பாளர்களையும் வெற்றிகொள்ள காரணமாக அமைந்தது.

எமது கட்சிக்கு எதிராக எந்த கட்சி வந்தாலும் அதை முறியடித்து வெற்றிகொண்டு காட்டுவோம் என்று அந்த சக்திகளை ஓடோட விரட்டியடிக்கும்படி எமது கட்சியையும், தலைமையையும் வெற்றிகொள்ள மிக காரணமாக இருந்த உங்களுக்கு எனது நன்றியை இத்தருவாயில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -