எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்குப் பிராந்திய தலைமையாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட தலைமைத்துவசபை உறுப்பினர்களான பொறியியலாளர் MM.பலுளுள் ஹக் மற்றும் MMM.ஜனூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வேட்பாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தேர்தல் தொடர்பில் உரையாற்றியதுடன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார்.


