பொதுஜன பெரமுன மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஐஎஸ்ஐஎஸிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல் குறித்து பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக கட்சி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கலகொடஅத்தே ஞானசார தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
தொலைபேசிகள் ஊடாகவே இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் சில அழைப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
TamilMirror
