ரணில் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமை மஹிந்த செய்த தவறாகும் - துறவிகளின் குரல்

ந்த நாட்டில் ஜாதிக ஹெல உறுமய போன்று பௌத்த மதத்தை சீரழித்தவர்கள் எவரும் கிடையாது என்று ´துறவிகளின் குரல்´ அமைப்பின் ஆலோசகர் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார். 

மேற்கு நாடுகளின் பணத்துக்கு அடிமைப்பட்டு நாட்டின் தேசியத்துவத்தை சீரழித்துள்ளதாக இன்று நாராஹென்பிட்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார். 

நாட்டுக்காக மஹிந்தவா அல்லது வயிற்றுக்காக ரணிலா என்று இந்த முறை தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இந்தமுறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கட்சி மாறுவதில்லை என்று மக்கள் உறுதிமொழி ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு கட்சி மாறுவது ஜனநாயக விரோத செயற்பாடு என்றும் அவர் தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷவிற்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் எந்தவொன்றும் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் மேர்வின் சில்வா மற்றும் ரணில் விக்ரமசிங்க போன்றோர் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாமையே மஹிந்த ராஜபக்ஷ செய்த தவறாகும் என்று ´துறவிகளின் குரல்´அமைப்பின் ஆலோசகர் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -