பொதுத் தேர்தலில் கல்குடாத் தேர்தல் தொகுதி முஸ்லிம் அரசியல் சமூகம்!

கடந்தகால வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து, அதன் விளைவுகளை எந்தவொரு சமூகம் ஆராயவில்லையோ, அந்த சமூகம் தோல்விகளை தோள்களில் தாங்கிக் கொள்ளும் என்ற பேரறிஞர் அல்லாமா இக்பால் அவர்களின் உயர்ந்த பார்வைகளோடு………………...!!!

எந்தவொரு சமூகம் தனது சிந்தனையை, தலை விதியை, தானாக மாற்றிக் கொள்ளாதவரையிலும் அல்லாஹ்வும் மாற்றமாட்டான் என்ற அல்-குர்ஆனிய வாக்குக்கு அமைவாகவும்………………..……..!!!

எந்தவொரு சமூகம் தனது சிந்தனையை, தலை விதியை, தானாக மாற்றிக் கொள்ளாதவரையிலும் அல்லாஹ்வும் மாற்றமாட்டான் என்ற அல்-குர்ஆனிய வாக்குக்கு அமைவாகவும்………………..……..!!!

பெரியோரை மதிக்காதவர்களும்,சிறியோருக்கு அன்பு காட்டாதோர்களும்என்னைச் சார்ந்தவர்கள் இல்லை என்ற நபி மொழிக்கு ஏற்ற வகையிலும்…………………!!!

மூன்றுபேர் பிரயாணம் செய்தால் ஒருதரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்,ஒரு அபீஷீனிய அடிமை தலைவனாக வந்தாலும் மார்க்கத்துக்குமுரண் இல்லாதவரையிலும் கட்டுப்பட வேண்டும் என்ற நபி மொழிகளுக்கு அமைவாகவும்……………….!!!”

மங்கிப் போன புரட்சியின் மேல் மீண்டும் ஓர் காலை வெளிச்சம்” ………………………………!!!???
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களின் ஷூறா அடிப்படையிலான காத்திரமான தலைமைத்துவத்தின் சரியான அணுகு முறைகளில் நமது கல்குடாத் தேர்தல் தொகுதி முஸ்லிம் அரசியல் சமூகம் நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க கடல் அலையென அணிதிரண்டு………………..……………!!!

ஒற்றுமையே நமது பலம்,மரத்தை வளர்ப்போம்,மற்றவைகள் மறப்போம்,தனித்துவம் காப்போம்,பனித்துளியாகோம்,துளித்துளி சேர்ந்து சமூத்திரமாவோம்,

தியாகத்தால் வளர்த்தெடுத்த தனித்துவ தீபம், தீயோரால் ஒளிகுன்றி அணைந்திடவும் விடுவதோ, அபிவிருத்தி அரசின் கடமை, அரசியல் தனித்துவம் நமது பிறப்புரிமை என்று நமது பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தை தக்க வைப்போம், சிந்திப்போம்,செயற்படுவோம் வாருங்கள்.
நமது சமூகத்தின் தேவைகள், பிரச்சனைகள்,சவால்கள் ஆயிரமுள்ளன அவற்றையும் கடந்து தேசிய, சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கமான நாம் இஸ்லாமிய உலகுடன் மாற்றங்களுடன் பரிணமித்து, ஒன்றித்து எழுச்சியை நோக்கி,கிலாபத்தை நோக்கி நிலை நிறுத்தும் பயணத்தில்………………………..!!!

முஸ்லிம் உம்மா என்பது புவியியல் கூறுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதன்று. அது கொள்கைகளை மையமாக வைத்தே அடையாளப்படுத்தப்படுகின்றது என்ற பேரறிஞர் மௌலானா அபுல் அஃலா மௌதுாதி அவர்களின் பார்வைகளுக்கு ஏற்ப, நேற்றும்,இன்றும்,நாளையும் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய சிந்தனைகள்,செயற்பாட்டாளர்கள் ஏற்றுக் கொள்ளும் தௌஹீதிய சிந்தனை கொண்ட இன்று இலங்கை முஸ்லிம் உம்மத்துக்கு தலைமை தாங்கும் மிகப் பொருத்தமான தலைமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம்,அதன் தலைமை ரஊப் ஹக்கீம் அவர்ளும் தான்.

எனவே அன்புள்ள கல்குடாத் தொகுதி பெரியோர்களே,புத்தஜீவிகளே,உலமக்களே, படித்தவர்களே, சகோதரர்களே, சகோதரிகளே,தம்பிமார்களே,தங்கைமார்களே, நாம் யாரும் நுாறு வருடங்கள் வாழ வந்தவர்கள் அல்ல.நாம் அனைவரும் மரணிக்கவிருக்கின்றோம் என்பதை கவனத்தில் கொண்டு அந்த ஷூறாவை உடைத்தெறிந்து பேரினவாத தலைமைகளுக்கு முட்டுக் கொடுக்க முந்திச் சென்று கல்குடா முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்தவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம்,அதன் தலைமையுமல்ல நமக்காக நாம் உருவாக்கிய ஷூறாவுக்கு கட்டுப்படும் இஸ்லாமிய சிந்தனைகளுக்கு ஆட்படாத சடவாத விபத்துக்கள்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்ட சமூகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஷூறா அடிப்படையிலான தலைமையின் கீழ் ஆர்ப்பரித்து கடல் அலையெனஅணிதிரள்வோம் சடவாத சிந்தனைகளை தகர்த் தெறிவோம்,பேரினவாத முட்டுக் கொடுப்புக்களுக்கு மூக்குடைப்போம்,நம்மை நாம் சரியான இணைப்பாக்கம்,தொடர்பாடல்,ஊடாக ஆளுவோம்,மீளுவோம் வாருங்கள்…..

றமழான் நோன்பு தந்த அல்-குர்ஆன்,ஈமான்,தக்வா,இபாதத்களுடன் சிறப்புச் சமூகம் ( கைற உம்மத்) என்ற அடையாளத்துடன்புதிய பயணத்தை தொடர்வோம்……………………
அல்லாஹூ அக்பர்
-sato mansoor-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -