மின்னல் நிகழ்வில் நடந்த அரசியல் நாடகம் அம்பலம் - விசேட காணொளி

ங்கா-இ.தொ.கா (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) கள்ளத் தொடர்பும் மின்னல் கள்ள அரசியல் நாடகமும் அம்பலம் - விசேட காணொளி வெளியாகியுள்ளது. விடையத்தை படித்துவிட்டு பாருங்கள் காணொளியை. ராஜா மகேந்திரனின் மகாராஜா கூட்டு நிறுவன சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் ,ஜெ ரங்கா செய்யும் அரசியல் கள்ள நாடகம் தற்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. ஜூலை 4ம் திகதி இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் கலந்து கொண்டார்.

இதன்போது நிகழ்ச்சிக்கான இடைவெளியில் ரங்கா, சக்திவேல் மூலம் "திகாம்பரத்தை" திட்டச் சொல்லும் விதமும் அதற்கு அவர் சக்திவேலுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் மற்றும் காணொளி அடங்கிய வீடியோ ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் ரங்காவின் கள்ள அரசியல் நாடகத்தை உலக மக்கள் குறிப்பாக மலையக மக்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும். இது TV இல் வெளியாகவில்லை. உள்ளக மகரா ஒன்றில் இருந்து நாம் சிறப்பாக பெற்ற காட்சிகளே இவையாகும்.

 நேரடி நிகழ்ச்சி என்று சொல்லுகின்ற போதும் அங்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் அனைத்தும் ரங்காவின் செட்டப் என்பது உறுதியாகிறது. ரங்காவே கேள்விகளை கொடுத்து அவரே பதிலையும் கொடுத்து இவ்வாறு மின்னல் நிகழ்ச்சியை நடத்தி வயிற்றுப் பிழைப்பு செய்கிறார். இதற்கு நடு வீதியில் துண்டை கீழே விரித்து பிச்சை எடுக்கலாம் என்றே இந்தக் காணொளியை பார்க்கும் பலர் ரங்காவிற்கு ஆலோசனை வழங்குவர் என்பது மாத்திரம் தின்னம். yarlminnal



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -