ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் சூறாவளி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்கின்றார்.
இக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ஹக்கீம் கண்டியிலி இருந்து இன்று காலை ஹெலிக்கொப்டர் மூலம் நிந்தவூரை வந்தடைந்தார்.
இன்று காலை முதல் நல்லிரவு வரை அவர் பல முக்கியமான கூட்டங்களில் கலந்து கொள்வதோடு அம்பாறை மாவட்ட ஆதரவாளர்களையும் சந்தித்து உரையாடவுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ள சில முக்கியமான கூட்டங்களும், இடம்பெறும் இடங்களும், நேரமும் கீழே தரப்பட்டுள்ளன.
இடம் நேரம்
ஒலுவில் கிரீன் விலா 11.30
சம்மாந்துறை பள்ளிவாசல் நிர்வாகத்துடனான சந்திப்பு 04.30
அலுவலக திறப்பு விழா - வரிப்போத்தான்சேனை 06.30
பொதுக்கூட்டங்கள் - இரக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை 07.00 – 12.00 மணி வரை

