இசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு - பிரபலங்கள் அஞ்சலி!

மிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பெப்சி தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் "தமிழ்த் திரையுலகில் அழிக்கமுடியாத பொக்கிஷம், இசையுலகில் முடிசூடா மன்னன், திரையுலகில் புராண வரலாற்று படங்கள் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு பாணி வகுத்து மெல்லிசை மன்னர் என பட்டம் பெற்ற இசைத்தாயின் மூத்த மகன் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று நம்மை எல்லாம் விட்டு பிரிந்து இறைவனிடமும், இயற்கையிடமும் இசையிடமும் கலந்து விட்டார்.

அவருடைய ஆன்மா சாந்தி அடைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இறைவனை பிரார்த்தனை செய்வதோடு, அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் நாளை படப்பிடிப்புகளை ரத்து செய்யப்படுகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -