அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நாளை மாலை கல்முனையில்!

எஸ்.அஷ்ரப்கான்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுத் தேர்தல் மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நாளை 2015.07.26 ஞாயிற்றுக் கிழமை மாலை கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுத்தேர்தல் வேட்பாளர் விரிவுரையாளர் கலீலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் முஸ்லிம்களின் காவலன் என வர்ணிக்கப்படுபவருமான அமைச்சர் றிஸாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் முதலாவது இப்பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு கௌரவ அதிதியாக அமைச்சர் அமீர் அலி அவர்களும், விசேட அதிதிகளாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களும், கட்சியின் தேசிய அமைப்பாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சீ.எம். முபீத், வெஸ்டர் ஏ.எம். றியாஸ், வேட்பாளர்களான முன்னாள் உப வேந்தர் இஸ்மாயீல், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப், தொழிலதிபர் சித்தீக் நதீர், அன்வர் முஸ்தபா உட்பட அரசியல் பிரமுகர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இப்பொதுத் தேர்தலில் முதன் முறையாக அம்பாரை மாவட்டத்தில் களமிறங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாரை மாவட்ட மக்கள் பெரும் வரவேற்பளித்து வருகின்ற நிலையில் கடந்த காலங்களில் முஸ்லிம்களின் அரசியல் முகவரியாக மர்ஹூம் அஷ்ரபினால் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வருகையை மக்கள் பெரிதும் விரும்புவதாக பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -