ஹாசிப் யாஸீன்-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் தொழுகையிலும், துஆக்களிலும் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து ஊர் மக்களினதும், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் உலமாக்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு ஆதரவாளர்களுடன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு அம்பாறை கச்சேரிக்கான பயணத்தை மேற்கொண்டார்.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம.மன்சூர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.