'குர்ஆனிய சிந்தனை' நூல் வெளியீட்டு நிகழ்வு!

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
ப்ஸீர் சூரா அல் பாத்திஹா மற்றும் சூரா அல் பகராவின் தமிழ் விளக்கவுரையான உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர்(நளீமி) எழுதிய 'குர்ஆனிய சிந்தனை' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு பிரதம தபால் நிலைய கேட்போர்கூடத்தில் நேற்று வியாழக்கிழமை(02) நடைபெற்றது.

ஆல்குர்ஆன் கற்கைகள் திறந்த கல்லூரியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அல்ஹாஜ் ரீ.எல்.எம்.நவாஸ், அஷ்ஷெய்க் சி.ஐயூப் அலி, கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாறக்(மதனி) மற்றும் அஷ்ஷெய்க் ஹைருல் பஸார் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அத்துடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல், திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி, ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமுமான எம்.எம்.சுஹைர், மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம் உள்ளிட்ட புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், உலமாக்கள் என அதிக எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தலைமையுரையை அஷ்ஷெய்க் சி.ஐயூப் அலி நிகழ்த்தினார். நூல் அறிமுகத்தை கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி நிகழ்த்தியதுடன் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாறக்(மதனி) நிகழ்த்தினார்.

ஏற்புரையை நூலாசிரியர் உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை நூலாசிரியரிடமிருந்து அல்ஹாஜ் ரி.எல்.எம்.நவாஸ் பெற்றுக் கொண்டதுடன் அவரிடமிருந்து அதிதிகளும் நூலை பெற்றுக் கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -