மஹிந்த எந்த தலையில் ஏறிக் குந்தினாலும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலை வெல்ல முடியாது - பிரதமர் ரனில்

இக்பால் அலி-

நாங்கள் ஹிரியாலை தேர்தல் தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் வழங்கவுள்ளோம். அங்குள்ள சாலிந்த திசாநாயக கூறினார். செங்கோளை தூக்கிக் கொண்டு ஓடுவதாகக் கூறியுள்ளார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவதில் வேலையில்லை வீட்டில் இருந்து கொண்டு மைதானத்தைச் சுற்றி ஓடுவது அவருக்கு பொருத்தமாக அமையும். இவருக்கு இதை சொல்வதை விட வேறு ஒன்றுமில்லை. நாங்கள் புதிய பாதையை நோக்கிப் பயணிக்கின்றோம். புதிய சமூகத்தை கட்டி எழுப்புவதற்குப் புறப்பட்டுள்ளோம். 

நாட்டை முன்னேற்றுவதற்கும் பொது மக்களுடைய கையிலே பணம் புழுக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஊழலற்ற ஆட்சிய இல்லாதொழித்து நல்லாட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். இதற்காக ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெறச் செய்யுங்கள். என்று பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜே. சீ. அலவத்துவலவையை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மாவத்தகம சாமோதய விளையாட்டு மைதானத்தில் 24-07-2015 நடைபெற்றது அந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரனில் விக்கிரமசிங்க இவ்வாறு இதனைத் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து பேசுகையில்

நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஜனவரி எட்டாம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்து நல்லாட்சியை ஏற்படுத்தினோம். உலகம் ஆச்சரியப்படுமளவுக்கு உலக சம்பிரதாய முறைகளையும் உடைத்து இலங்கை சம்பிரதாய முறைகளையும் மீறி குருநாகலுக்கு மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டி போட வந்துள்ளார். ஜனவரி எட்டாம் திகதி தோல்வியுற்றதைப் போல மீண்டும் தோல்வியடைப் போகின்றார். 

அவருக்கு தற்போது வாக்குகள் இல்லை. அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் இல்லை. அவருக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவின் கையிலுள்ளது. அவர் கட்சியின் தலைவர். அவரை பிரதமராக்குவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குருநாகலில் போட்டியிடுபவர்கள் எவரும் அவருக்கு ஆதரவு வழங்கத் தயார் இல்லை. அவ்வாறாயின் அவர் எவ்வாறு வெற்றி பெறுவது? கட்சியின் தலைவர் பிரதமர் ஆக்கமாட்டேன் எனக் கூறினால் அவர் எப்படி தேர்லில் வெற்றி பெறுவது. எந்த தலையில் ஏறிக் குந்தினாலும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலை வெல்ல முடியாது. 

ஜனவரி எட்டாம் திகதியை விட குறைந்தளவு தான் கிடைக்கப் போகிறது. எதற்கு வாக்குகளை வீண் விரையம் செய்ய வேண்டும். தற்போது அரச குடும்பம் என்று மக்கள் கருதத் தயாரில்லை. அரச குடும்பத்தை வாழ வைப்பதற்கு. மக்களுக்கு தேவையாக இருப்பது மக்களுடைய எதிர்காலம் பற்றியதாகும். இந்த நாடு உங்களுடைய நாடாகும் என நினைத்துக் கொள்ளுங்கள். அன்று வாக்களித்தவர்கள் கூட இனிமேல் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அன்று அவர்கள் கூறினார்கள் எரிபொருள்களின் விலையைக் குறைக்க முடியாது என்றார்கள். நாங்கள் எரிபொருள்களின் விலைகளைக் குறைத்தோம். 

அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிப்போம் எனக் கூறினோம். அதவர்களுடைய சம்பளத்தையும் அதிகரித்தோம். ரூபா 50 க்கு நெல் கொள்வதற்கான கட்டுபாடு விலையொன்றை நிர்ணயித்த போது அது முடியாது எனக் கூறினார்கள். நாங்கள் அதனைச் செய்து காட்டினோம். இது போல எங்களுடைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனை உணர்ந்த மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதற்கு தயாராகிக விட்டார்கள். நாங்கள் 100 வேலைத் திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களில் எவ்வளவு அளப்பரிய சேவைகளை எங்களால் செய்ய முடியும் எனில் நாங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் எத்தனையோ அபிவித்தி வேலைகளைச் செய்ய முடியும்.

நாங்கள் எங்களை எதிர்காலம் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கிறது. எதிர் காலத்திலுள்ள சவால்களின் பிரச்சினகைள் பற்றி பார்க்க வேண்டியிருக்கிறது. விசாலனமான பிரச்சினை தொழில் ரீதியான பிரச்சினை. இன்று இளைஞர்கள். தொழில் வாய்பபை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். அதேபோல பாடசாலைகயில் கல்வி பயிலும் குழுவினர்கள். அவர்கள் பாடசாலை விட்டு வெளியேறும் அவர்களுக்கு தொழில் அவசியமாகும். 10 இலட்சம் பேர்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். ஐந்து ஆண்டகளில் இதனை நடைமுறைப்படுத்திக் காட்டுவோம்.

இதனை இலங்கையினால் மட்டும் தனியே செய்ய முடியாது. வெளிநாட்டவர்களின் உதவி தேவை, அந்த நாட்டவர்களுடைய அனைத்து வகையிலான மூல வளங்களும் கொண்டு நமது இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இந்த வகையிலேயே கணிசமாளவு எமது நாட்டு இளைஞர்களுக்கு தொழில் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் மஹிந்த ராஜக்ஷ ஆட்சியிலிருந்து போதும் நாங்கள் 100 வேலைத் திட்டத்தின் கீழ் குளியாப்பிட்டியவில் கார் உற்பத்தி கைத்தொழில் நிலையத்தை ஆரம்பித்து கார்கள் ஏற்றுமதி செய்வதற்கான வேலைகள் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீன நிறுவம் வந்து மீண்டும் அம்பாந்தோட்டையிலுள்ள துறைமுகத்தை மீளத் திருத்தியமைத்து செயற்படுத்துவத்கான வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எமது நாடு நான்கு ஐந்து ஆண்டுகள் செல்லும் போது எமது நாட்டிலிருந்து ஆடைகளை விட கார் உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி அதிகரிக்கபட்டிருக்கும். 

சிறந்த உயர் கல்வியை வழங்குவோம். விசேடமாக கனணி சமூக வலமைப்பை உருவாக்கி ஒரு புரட்சிகாமான கைத்தொழில் புரட்சியை ஏற்படுத்தவுள்ளோம.. இது போல அபிவிருத்தி முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளோம். புதிய நாட்டை உருவாக்குவதற்கும் புதிய இலங்கையை உருவாக்குவதற்கும். தொழில் வாய்ப்பை அதிகரிப்பதற்கும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிங்கள்.

நாங்கள் மத்திய பகுதிக்கு நெடுந்தூர அதிவேக பாதை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கவுள்ளோம் கடவத்தையிலிருந்து குருநாகலுக்கும் குருநாகலிலிருந்து கலகெதரைக்கும் குருநாகலிலிருந்து தம்புள்ளைக்கும் ஆரம்பிக்கவுள்ளோம். குருநாகலிலிந்து கலகெதரை ஊடாகச் செல்லவுள்ளது. அந்தவகையில் மாவத்தகம நகர் மேலும் அபிவிருத்தியைக் காணவுள்ளது. முதலாம் கட்ட வேலைத் திட்டத்திற்கு சீனா உதவி புரிய உள்ளதாகவும் கடந்த வருடத்தை விட மிகவும் குறைந்தளவுக்கு

நாங்கள் பெற்று இருக்கிறோம். மீரிகதவிலிருந்து குருநாகல் வரைக்கும் ஆசியா அபிவிருத்தி வங்கி உதவி செய்யவுள்ளது. பொத்துஹெரவிலிருந்து கலகெதரவுக்குச் செல்ல யப்பான் நாட்டுடன் கதைத்து வருகின்றோம்.

ஒரு புறம் கைத்தொழில் ரீதியான வலயத்தையும் மறு பக்கம் அதி வேக நெடுஞ்சாலை வருவது குருநாகல் மாவட்டத்திற்கு மத்தியிலாகும். குருநாகல் மாவட்டம் அதிவேகத்தில் முன்னேற்றத்தைக் காணவுள்ளது. சகல மக்களும் பொருளாதாரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம். சாதாரண மட்டத்திலுள்ளவர்களும் வியாபார ரீதியாக முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாகும்.

அதேபோல கல்வியிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகின்றோம். க. பொ. த. சாதாண தரத்தில் சித்தியடைவில்லை என்றால் படிப்படை இடைநடுவில் விடத் தேவையில்லை. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளோம். விளையாட்டுத் துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான அகிலவிராஜ காரியவசம் , எஸ்;. புp. நாவின்ன, காமினி ஜயவிக்கரம பெரேரா , அசோக அபேசிங்கள் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -