100 நாள் வேலைத்திட்டத்தில் பல பணிகள் நிறைவேற்றம் - பிரதமர் ரணில்

க.கிஷாந்தன்-

டந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது போன பல பணிகளை 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹாலிஎல பிரதேசத்தில் 19.07.2015 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அநுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்தி மஹிந்த ராஜபக்ஷவை மேடையில் ஏற்றி புதிய தேர்தல் அறைகூவலை விடுத்துள்ளனர்.

'நாட்டிற்கு உயிர்கொடுப்போம்' என்ற தொனிப்பொருளில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 10 வருடங்களாக மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்திற்கு உயிர்கொடுத்தார். நாட்டுமக்களுக்கு தாக்குதல் மேல் தாக்குதல் நடத்தினார்.

பின்னர் 3 வது முறையாகவும் ஜனாதிபதியாகும் ஆசையுடன் களமிறங்கினார்.

ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பான தேர்தல் பணிகளை மேற்கொண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம்.

பொதுமக்களுக்காகவே இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -