உலக சுற்றாடல் தினத்தை ஒட்டிய நிகழ்வு வெள்ளிக்கிழமை (05-06-2015) மருதமுனை அல்-மதினா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.ஆர்..நிஃமத்துல்லா தலைமையில் நடைபெற்றது.
இதில் சுற்றாடலுக்குப் பொறுப்பான ஆசிரியை எம்.ஜே.ஜாயிதாவின் ஒழங்கு படத்தலில் மாணவிகள் சுற்றாடல் கீதம் இசைத்தனர். பாடசாலையில் பூந்தோட்டம் உருவாக்கிய ஆசிரியை திருமதி எச்.எம்.எச்.காசீமுக்கு ஆசிரியை திருமதி எப்.என்.எம்.ஜூனைத் பரிசு வழங்கினார்
பகுதித் தலைவர் ஆசிரியர் ஏ.எச்.எச்.றகுமான் சுற்றாடல் பற்றி விசேட உரையாற்றினார். இந்த நிகழ்வில் ஆசிரியர்களும,மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பி.எம்.எம்.ஏ.காதர்-



