அமைச்சர் ஹக்கீம் மண்டியிட வில்லை வதந்திகளை நம்ப வேண்டாம்.

சபான் சிறாஜ்-

நேற்று அதாவது 21.06.2015 மாலை 04.45 க்கு ஆரம்பமாகிய “ஹகீமுடன் ஒரு சில மணித்தியாலங்கள்” எனும் நிகழ்வு முகநுால் செயல்பாட்டாளரும் கவிஞருமான ரவூப் ஹசீரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

முகநுால் பிரபலங்கள் உள்ளிட்ட ஒரு சில ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர், ஏலவே இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வு என்பதால் இந் நிகழ்வின் அழைப்பு நிறையப்பேருக்கு செல்லவில்லை. முக்கியமான பதிவர்கள் இதில் கலந்து கொள்ளவுமில்லை,

அமைச்சர் இந்நிகழ்விற்கு சற்று தாமதாக வந்திருந்த போதும் அனைரையும் அறிமுகம் செய்யும் படி கேட்டுக்கொண்டார். அதன் பிற்பாடு பதிவர்கள் கருத்துக்களை கட்சி சார்பாகவும், சமூகம் சார்பாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தெடர்ந்து உரையாற்றி அமைச்சர் ஹக்கீம்,

நாங்கள் இப்பாழுது இணைய உலாவியில் பலவீனமடைந்திருக்கிறோம், கடந்த காலங்களைப்போலல்லாது இன்று சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாய் உள்ளது, இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் செயற்படுவதற்கு ஒவ்வொரு அமைப்பாளர்களும் தங்கள் பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. இதற்கான வளவாளர்களை ஆராந்து சிறப்பாக செயற்படுத்துவதற்கு தயாராக வேண்டும். அது மாத்திரமின்றி எதிரியினைப்போல் செயற்படாமல் சற்று மாற்றமாக செயற்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஹக்கீம் யாரிடமும் மண்டியிட்டு செய்யும் படி சொல்லவுமில்லை, அப்படியான ஒரு விடயம் நடைபெறவுமில்லை. கலந்து கொண்டவர்கள் நாட்டின் பல பிராந்தியங்களில் இருக்தும் வந்தவர்கள் என்ற காரணத்தினால் போக்குவரத்து செலவிற்காக 2000 ரூபா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட செய்திக்கு:... கிளிக்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -