பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கொள்ளைக்காரக் கும்பல் கைது



யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 7பேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் ஒன்று மானிப்பாய் பொலிஸார் கிளிநொச்சியில் வைத்து இன்று வியாழக்கிழமை (25) கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 6 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணம், 4 மோட்டார் சைக்கிள்கள், ஐ போன், கமரா, வாள், ஐ பாட், கைச்சங்கிலி சங்கிலி, டி.வி.டி பிளயர் ஆகியன கைப்பற்றப்பட்டன. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, 'செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் கையை வெட்டி குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த 24 வயதுடைய 12 ஆவது சந்தேகநபர் (ஏற்கனவே 11 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்) புதன்கிழமை (24) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் காங்கேசன்துறை இராணுவத்தினருக்கு முன்னர் உதவியாளராகச் செயற்பட்டார் என்பது தற்போது, இராணுவத்தினருடன் தொடர்பு இல்லையென்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. சந்தேகநபரிடமிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டதுடன், அவருடை அலைபேசியும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை நடவடிக்கையுடன் தொடர்புடைய கொள்ளைக்கார கும்பலுடன் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார், கொள்ளைக்கார கும்பலைச் சேர்ந்த நபர்களை கிளிநொச்சி சாந்தபுரம் மற்றும் உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் வைத்து வியாழக்கிழமை (25) மடக்கிப் பிடித்தனர். பிடிபட்டவர்கள் கிளிநொச்சி, மானிப்பாய், கட்டுடை மற்றும் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -