17 வயதுடைய யுவதிக்கு கைத்தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காண்பித்து உணர்சியூட்டி கடத்திச் சென்று கற்பமுறச்செய்த 38 வதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான நபரொருவரும் ஆட்கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி சாரதியும் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு-உறுகாமம் கிராமத்தை பூர்வீகமாகவும் ஏறாவூர்-முஹாஜிரின் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பேக்கரி உற்பத்தி உணவுப்பண்ட வியாபாரியான மீராமுகைதீன் தஸ்லிம் என்ற இந்த நபர் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏஎம்எம் ரியாழ் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவிடப்பட்டது. கடந்தகால போர்ச்கூழலினால் இடம்பெயர்ந்ததன் காரணமாக இவர் ஏறாவூரில் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட யுவதி தற்போது ஏழு மாத கற்பிணியாய் இருப்பதாக வைத்திய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இதுபற்றி தெரிக்கப்படுவதாவது----.....குறித்த யுவதியின் தந்தைக்கு சொந்தமான ஹோட்டலில் இந்த நபரின் மூத்த சகோதரின் மகன் கூலித்தொழிலாளியாக சிலகாலம் பணிபுரிந்து இடைவிலகியுள்ளார். இவரை மீண்டும் கடையில் இணைப்பதற்காக இந்த நபர் பல தடவைகளில் வீட்டிற்கு அழைத்து வந்த சமயம் யுவதியுடனான தொடர்பு ஆரம்பித்துள்ளது. பின்னர் யுவதின் தந்தையும் தாயும் ஹோட்டலிற்கு சென்றிருந்த சமயம் பார்த்து இந்த நபர் வீட்டிற்கு வந்து யுவதியுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கைத் தொலைபேசி மூலமாக ஆபாச படங்களை காண்பித்துள்ளார்.
சிலநாட்கள் சென்ற பின்னர் யுவதியுடன் உடலுறவு கொண்டு அதனை வீடியோ செய்துள்ளார். அதையடுத்து அந்த வீடியோ காட்சியை யுவதியிடம் காண்பித்து அச்சுறுத்தல் செய்து பலதடவைகள் உடலுறவு கொண்டதையடுத்து யுவதி கற்பவதியாகியுள்ளார்.
கற்பம் தரித்து ஐந்து மாதங்கள் கழிந்த நிலையில் சிசு அழிப்புச் செய்ய வருமாறு முச்சக்கர வண்டியொன்றில் கூட்டிச் சென்று கண்டி மாவட்டத்தில் இரண்டு; இடங்களில் இந்த இருவரும் தங்கியுள்ளனர்.
வீட்டிலிருந்து வரும்போது போதுமான ஐம்பதாயிரம் ரூபா பணம் மற்றும் அங்குள்ள 15 பவுண் தங்க நகைகளையும் எடுத்துவருமாறு கூறியதற்கிணங்க பணம் மற்றும் தங்க ஆபரணங்களையும் யுவதி எடுத்துச் சென்றுள்ளார்.கண்டியில் தங்கியிருந்தவேளை நகைகளைவிற்று பணம் பொறப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த யுவதி கண்டியில் வெளியே செல்லவிடாமல் அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தலுக்
குட்படுத்தப்பட்டுள்ளார்.
இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக யுவதியின் தந்தை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார.; இதனை அறிந்த கடத்தல்காரர் காலத்திற்கு காலம் யுவதியின் வீட்டாருடன் வௌ;வேறு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெற்றால் யுவதியை மீளஒப்படைக்க முடியும் எனக்கூறியுள்ளார்.
இந்நிலையில் யுவதின் தந்தை தந்திரமாக பேசியதையடுத்து அந்த யுவதி பஸ் ஒன்றில் ஏற்றி ஏறாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பஸ்ஸில் பயணித்த கடத்தல்காரர் இடைவழியில் இறங்கி தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து அவரது முதல் மனைவியின் வீட்டுக்குச் தேடிச் சென்ற போது மறைவிலிருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த விடயங்களை குறித்த யுவதி ஏறாவூர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
